இந்தியாவில் மருத்துவ மாணவி ஒருவருடன் 18 வயது மாணவன் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் உள்ள ஹார்டிங் மருத்துவக் கல்லூரி முதலாமாண்டு படித்து வரும் மாணவியும்(19) ஜனக்பூரி பகுதியைச் சேர்ந்த மாணவனும்(18) அங்குள்ள ஹேட்டலில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

இது குறித்து தகவல்கள் தெரிவிக்கையில், தற்கொலை செய்த மாணவியின் தந்தை ரோஹினி பகுதியில் உள்ள துணை இராணுவப் படையில் வேலை செய்து வருவதாகவும், மாணவியுடன் தற்கொலை செய்து கொண்ட மாணவன் தனக்கு பயிற்சி வகுப்பு இருப்பதாக கூறி மாணவியுடன் ஒன்றாக சேர்ந்து, துவாராகாவில் உள்ள ஒரு ஹோட்டலில் ஆன்லைன் மூலமாக அறை வாடகைக்கு எடுத்துள்ளனர்.

View image on TwitterView image on Twitter

Bodies of a boy and girl found hanging in a hotel room in Delhi’s Dwarka. Investigation underway

இவர்கள் நேற்று வரைக்குமே வாடகைக்கு எடுத்திருந்த நிலையில், வெகு நேரம் ஆகியும் வெளியில் வராததால், ஹோட்டல் ஊழியர்கள் அவர்கள் இருக்கும் அறைக்கு சென்று கதவை தட்டியுள்ளனர்.

ஆனால் அவர்கள் திறக்காததால், பொலிசாருக்கு இது குறித்து தகவல் தெரிவித்துள்ளனர். உடனடியாக ஹோட்டலுக்கு வந்த பொலிசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, இருவரும் அங்கிருந்த பெட் சீட்டை பேனில் கட்டிக் கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது காதல் பிரச்சனையாகக் கூட இருக்கக்கூடும் என்ற கோணத்தில் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன் பின்னர் இருவரது உடலையும் கைப்பற்றி போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர் இருவரது தற்கொலை குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.

ஒருவேளை காதல் பிரச்சனையாக கூட இருக்கலாம் என்று போலீசார் எண்ணுவதாக கூறப்படுகிறது. இந்த தற்கொலை குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here