தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கொலை செய்யப்பட்டது உண்மை தான் என்று அவரது அண்ணன் மகள் தீபா பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.

ஜெயலலிதாவின் அண்ணன் மகளும், எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவையின் பொதுச் செயலாளருமான தீபா பிரபல தனியார் தொலைக் காட்சிக்கு சிறப்பு பேட்டி ஒன்றை அளித்தார்.

அதில் போயல் கார்டன் இல்லம் நான் வாழ்ந்த வீடு. ஜெயலலிதா வாழ்ந்து மறைந்த போயஸ் கார்டன் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற எனக்கு விருப்பமில்லை.

அதை நான் அனுமதிக்க மாட்டேன். ஜெயலலிதா வாழ்ந்த வீடு கோவில் போல மதிக்கப்பட வேண்டும்.

என் அத்தை ஜெயலலிதாவை கொலை செய்தது உண்மைதான். தீபக்கும் சேர்ந்து கூட்டு சதி செய்து விட்டனர். இதன் பின்னணியில் சசிகலா குடும்பம் இருக்கிறது. ஆதாரங்களை தகுந்த நேரம் வரும் போது வெளியிடுவேன் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here