இந்திய சினிமா என்பதே தற்போது ரூ. 100 கோடி வசூல் என்ற வட்டத்திற்குள் மாட்டிக்கொண்டது. அதை தொட்டால் தான் கௌரவம் என்பது போல் ஆகிவிட்டது.

இந்நிலையில் இந்திய சினிமாவிலேயே முதன் முறையாக ரூ. 100 கோடி வசூலை தாண்டியது மட்டுமில்லாமல், உலகம் முழுவதும் தமிழ் சினிமாவின் மார்க்கெட்டை பெரிதுப்படுத்திய படம் தான் சிவாஜி.

இப்படம் வெளிவந்து இன்றுடன் 10 வருடங்கள் ஆகின்றது, இதை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்த படத்தின் மூலம் தான் இந்தியாவில் தனக்கென்று பெரிய மார்க்கெட் ஒன்றை உருவாக்கினார், இதே போல் அடுத்து வரவிருக்கும் ரஜினி-ஷங்கர் கூட்டணியின் 2.0 மேலும் ஒரு புதிய சாதனையை படைக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here