சுவிஸின் துர்கவ் மாகாணத்தில் உள்ள கான்ஸ்டேன்ஸ் ஏரியில் தான் இந்த விபரீத சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இரண்டு தினங்களுக்கு முன்னர் 42 வயதான தந்தை ஒருவர் தனது 4 வயது மகனுடன் வெளியே சென்றுள்ளார்.

Romanshorn துறைமுகத்திற்கு சென்ற தந்தை வாடகைக்கு ஒரு படகை எடுத்துக்கொண்டு ஏரியில் மகனுடன் பயணம் செய்துள்ளார்.

பிற்பகல் 2.30 மணியளவில் கழிவறைக்கு செல்ல வேண்டும் என்பதால் படகை மகனிடம் விட்டுவிட்டு தந்தை கழிவறைக்கு சென்றுள்ளார்.

படகை திருப்பும் சக்கரத்தை பற்றிக்கொண்ட மகன் தனது விருப்பத்திற்கு ஏற்றவாரு திசைகளை திருப்பியுள்ளான்.

அப்போது, படகுக்கு எதிரே மற்றொரு பயணிகள் படகு மிதமான வேகத்தில் வந்துள்ளது.

இந்நிலையில், கழிவறைக்கு சென்று திரும்பிய தந்தை இக்காட்சியை கண்டு அதிர்ச்சி அடைந்து படகை திருப்ப முயன்றுள்ளார்.

ஆனால், கால தாமதம் ஆனதால் இரண்டு படகுகளும் ஒன்றோடு ஒன்று மோதியுள்ளன.

எனினும், இருப்படகுகளில் இருந்த பயணிகளுக்கு ஆபத்து எதுவும் ஏற்படவில்லை.

தந்தை மற்றும் மகனுக்கு சிறியளவில் காயங்கள் ஏற்பட்டதால் இருவரும் அருகில் இருந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொண்டனர்.

தந்தை வாடகைக்கு எடுத்த படகிற்கு மட்டும் சுமார் 3,000 பிராங்க் மதிப்பிலான சேதாரம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here