இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள வறிய கிராமம் ஒன்றில் 5 வயது பிள்ளையின் தோற்றத்தில் 50 வயதான குள்ள மனிதர் வாழ்ந்து வருகிறார்.

29 அங்குலம் உயரமான பாசோர் லால் என்ற இந்த நபரின் உடல் வளர்ச்சியடையா விட்டாலும் அவர் தேக ஆரோக்கியத்துடன் இருப்பதாக கிராம மருத்துவர் கூறியுள்ளார்.

லாலின் உடல் வளர்ச்சி குன்றிய போது, அவரை விசேட மருத்துவ நிபுணரிடம் காட்டும் அளவுக்கு குடும்பத்தினருக்கு வசதி இருக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

பாசோர் லாலின் பெற்றோர் உயிருடன் இல்லை, அவரது சகோதரரான கோபி என்பவரும் அவரது மனைவியும் அவரை பராமரித்து வருகின்றனர்.

தமது குடும்பத்தில் எவரும் இந்த அளவுக்கு குள்ளமாக இருக்கவில்லை என பாசோர் லாலின் சகோதரான கோபி கூறியுள்ளார்.

இந்த குள்ள மனிதரை பார்க்க இந்தியாவில் பல பகுதிகளில் இருந்தும் மக்கள் அவரது கிராமத்திற்கு செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தான் குள்ளமாக இருப்பதை எண்ணி ஆரம்பத்தில் கவலையடைந்தாலும் தற்போது அந்த கவலை தனக்கில்லை எனவும் தானும் மற்றவர்களை போல் குடித்து, சாப்பிட்டு சந்தோஷமாக இருப்பதாகவும் பாசோர் லால் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here