அமெரிக்கா சென்றுள்ள ரஜினி, சூதாட்ட கிளப்பில் அமர்ந்திருப்பது போன்ற புகைப்படம் வெளியாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது.

சமூகவலைத்தளங்களில் பலரும் கடுமையான கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.

அவர் பேசுகையில், தமிழக மீனவர்களை இலங்கை இராணுவம் சுட்டுக் கொன்றிருக்கிறது, இதுபற்றி கேட்க இந்தியாவுக்கு துப்பில்லை.

கட்சத்தீவை மீட்டுக்கொடு, இல்லையேல் எங்களை பிரித்துவிடு, நான் ஆட்சிக்கு வருவேன், கடற்படையை உருவாக்கி நெய்தல்படை என பெயர் சூட்டுவேன்.

தமிழர்கள், தமிழர் என்ற உணர்வு கொள்ளாததாலும், நமக்கென்று அரசு இல்லாததாலும் தமிழராகிய நாம் வீழ்ந்தோம். ஆட்சியில், அதிகாரத்தில் தமிழ் மொழி இல்லை.

அடிமை இந்தியாவில்கூட, எம் மண்ணில் 50 கிலோ மீட்டருக்கு ஒருமுறை கப்பம் கட்டி பயணிக்கவில்லை.

ஆனால் சுதந்திர இந்தியாவில் டோல்கேட் சுங்கச் சாவடியில் கப்பம்கட்டிப் போகின்ற அவலத்தில் இருக்கிறோம்.

நாம் தற்போது 70-வது சுதந்திர தினத்தைக் கொண்டாட இருக்கிறோம், ஆனால் 100-வது சுதந்திர தினத்திற்குள் இந்தியாவை வெளிநாட்டிற்கு முழுவதுமாக விற்றுவிடுவார்கள்.

தமிழகத்தில் நாங்கள் போராடி கொண்டிருக்கிறோம், ஆனால் ரஜினி அமெரிக்காவில் கேசினோ விளையாடி கொண்டிருக்கிறார், இதை பற்றி சொல்ல வேறு ஒன்றும் இல்லை என்று பேசியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here