Sunday, November 18, 2018

சூரியா 37 படத்தின் புதிய தகவல்கள் !!

0

சூரியா தற்போது செல்வராகவன் இயக்கத்தில் NGK படத்தில் நடித்து வருவது பலரும் அறிந்தது. இதன் பஸ்ட் லுக் போஸ்டர்ரும் வெளியானது.
இதணை தொடர்ந்து சூரியா இயக்குனர் கே.வி ஆனந்துடன் இணையவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர்கள் கூட்டணியில் ஏற்கனவே அயன், மாற்றான் படங்கள் வெளியனது. அப்படங்களை தொடர்ந்து மூன்றாவதாக இணையவுள்ள படம் சூரியா 37.இப்படம் பத்து விதமான இடங்களில் எடுக்கப்படவுள்ளதாம் இந்த படம் அதிரடி  திரில்லர் வகையான கதை கொண்டதாம். இப் பட வேலைகள் வரும் ஜூலை மாதம் தொடங்கவுள்ளது.

சூர்யாவும் கார்த்தியும் இணைந்து நடிக்கும் படம் !!!

0

பல வெற்றி படங்களை தந்தவர் நடிகர் கார்த்தி திடீரென சரிவை கண்டாலும் வினோத் இயக்கத்தில் வந்த தீரன் அதிகாரம் ஒன்று மாபெரும் வெற்றி பெற்றது.
இப் பட வெற்றியின் பின் பாண்டியராஜ்  இயக்கத்தில் கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடித்து வருகிரார் கார்த்தி.இப்படம் இப்போது முடியும் நிலையில் உள்ளது. இப்படத்தில் ஒரு கெஸ்ட்  ரோல் பண்ணவுள்ளாராம் கார்த்தி அண்ணாவும் நடிகருமான சூரியா. இதை சஸ்பென்சாக  வைத்திருக்குரார் இயக்குனர் பாண்டிராஜ் .

ராதிகாஆப்தேவிடம் சில்மிசம் செய்து அறைவாங்கிய தமிழ் பட நடிகர்.

0

பாலியல் தொல்லை, படுக்கைக்கு அழைப்பது என்று பல நடிகைகள் பேச தயங்கும் விசயங்களை துணிசலாக பேசி வருபவர் ராதிகா ஆப்தே.ஒரு பிரபல நிகழ்சி ஒன்றில் கலந்து கெண்ட அவர் கூறிய விடயம் அதிர்சி அடைய செய்தது.
அவர் தமிழ் படம் ஒன்றில் நடித்த போது முதல் நாள் பட பிடிப்பின் போது பிரபலமான தென்னிந்திய நடிகர் திடீரென தன் பாதங்களை வருடியதாகவும் தான் கோபத்தில் ஓங்கி அறைந்ததாகவும் என்று கூறினார்.வாலாட்டிய அந்த நடிகர் யார் என்று கூறவில்லை. ராதிகா நான்கு தமிழ் படங்களில் தான் நடித்தார் என்பது குறிப்பிட தக்கது.

மூன்றாம் முறை அஜித் படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பை பெற்றவர் யார் தெரியுமா?

0

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் வீரம்,வேதாளம், மற்றும் விவேகம் படங்களை தொடர்ந்து நடித்து வெற்றி வாகை சூடி கொண்டார்.

இதில் வேதாளம் மற்றும் விவேகம் படங்களுக்கு இசை அமைத்திருக்கும் அனிருத்திற்கு மீண்டும் ஒரு வாய்ப்பை வழங்கியுள்ளது அஜித்-சிவா வெற்றி கூட்டணி. இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ள தயாரிப்பு நிறுவனமான ‘சத்ய ஜோதி பில்ம்ஸ்’ இப்படத்திற்கான மற்ற நடிகர்களை விரைவில் அறிவிக்க உள்ளது.

“சிம்புவை குறை கூறுவதால் ஒரு பயனும் இல்லை” ஸ்கெட்ச் இயக்குநர் பளிச் பேட்டி

0

‘ஸ்கெட்ச்’ பட இயக்குநர் விஜய் சந்தர் சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் சிம்பு பற்றிய கேள்விக்கு மனம் திறந்து பதில் அளித்துள்ளார். அவர் சிம்பு பற்றி கூறுகையில்;

“வாலு படம் தொடங்கிய நாள் முதல் எனக்கும், சிம்புவிற்கும் இடையேயான நட்பு வலுவாக உள்ளது. அவர் கண்டிப்பாக இயக்குநரின் நடிகர். எனது படம் தொடங்கியது இருந்து எனக்கு முழு சுதந்திரம் கொடுத்து சிறப்பாக நடித்தும் கொடுத்தார். சிம்பு மிகவும் வெளிப்படையாக பேசக்கூடியவர் அவர் மனதில் பட்டதை ஒளிவு, மறைவின்றி பேசுவது அவரின் நல்ல இயல்பையே காட்டுகிறது.” என்றார் விஜய் சந்தர்  இயக்குநர், சிம்பு எப்பொழுதும் தமக்கு உற்சாகம் தரும் நண்பர் என கூறி மகிழ்ந்தார்.

Follow Us

9,324FansLike
103FollowersFollow
56,665SubscribersSubscribe

Recent Posts