இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் ஜூன் 1-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. இதில் ‘பி’ பிரிவில் இடம்பிடித்திருந்த இலங்கை அணி இந்தியாவை வீழ்த்தியது. பாகிஸ்தானை வீழ்த்தினால் அரையிறுதிக்கு முன்னேற இயலும் என்ற நிலையில், பாகிஸ்தானிடம் தோல்வியடைந்து லீக் சுற்றோடு வெளியேறியது.

இதனால் இலங்கை நாட்டின் விளையாட்டுத்துறை மந்திரி தயாஸ்ரீ ஜெயசேகரா, வீரர்களின் உடற்தகுதி குறித்து விமர்சன்ம் செய்திருந்தார்.

இதுகுறித்து இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா கூறுகையில் ‘‘சொகுசாக இருந்து கொண்டு விமர்சனம் கூறுபவர்கள் பற்றி நான் கவலைப்படவில்லை. கிளியின் கூண்டு பற்றி குரங்கிற்கு என்னத்தெரியும்?. இதுபோன்ற குரங்குகள் கிளிக் கூண்டிற்குள் சென்று இதுபோன்று பேசிக் கொண்டிருக்கிறது’’ என்றார்.

இதனால் விளையாட்டுத்துறை மந்திரி தயாஸ்ரீ ஜெயசேகரா கடுங்கோபம் அடைந்துள்ளார். மலிங்கா கூறிய கருத்து குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்.

மேலும், தான் கூறிய கருத்து குறித்து தயாஸ்ரீ ஜெயசேகரா கூறுகையில் ‘‘இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் ஒப்பந்தத்தின் அடிப்படையில் மீடியாக்களின் விதிமுறை மீறி பேசியதாக, அவர் மீது விசாரணை நடைபெற்று வருகிறது. வீரர்களுடைய உடற்தகுதி குறித்துதான் நான் விமர்சன் செய்தேன். மலிங்காவின் பெயரை நான் குறிப்பிடவில்லை. ஆனால், அவரைத்தான் நான் கூறுவதாக நினைத்து என்னை பொது இடத்தில் தாக்கி பேசியுள்ளார்’’ என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here