இந்தியாவில் கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ஏனைய அணிகளைச் சேர்ந்த வீரர்கள் ஐபிஎல் அணிகளில் இணைந்து விளையாடி வருகின்றனர்.

அந்த வகையில் ஐபிஎல் அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் டோனி, ரெய்னா, பிராவோ, மெக்கல்லம், டூபிலிசிஸ் மற்றும் அஸ்வின் என்று ஒரு நட்சத்திர அணியை கொண்டிருந்தது.

ஆனால் சூதாட்ட புகார் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் தொடரில் விளையாடவில்லை.

இதைத் தொடர்ந்து தடை காலம் நேற்று முன் தினம் முடிந்துள்ள நிலையில், சென்னை அடுத்த தொடரில் புதுப் பொலிவுடன் களமிறங்கவுள்ளது.

இந்நிலையில் இது குறித்து சென்னை அணி சார்பில் தெரிவிக்கப்படுகையில், ஐபிஎல் போட்டிகளில் அணிக்கு ஒரு வீரரை தக்க வைத்து கொள்ளலாம் என்று கூறினால் நாங்கள் கண்டிப்பாக டோனியை தான் எங்கள் அணியில் தக்க வைத்து கொள்ளுவோம்.

இது குறித்து நாங்கள் இன்னும் டோனியிடம் எதுவும் ஆலோசனை நடத்தவில்லை. விரைவில் இது குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவர்கள் டோனியை சந்தித்து பேச உள்ளோம்.

எங்களுக்கு, விசுவாசம் மிகவும் முக்கியம். இது தான் எங்கள் அணிக்கு இவ்வளவு ஆண்டுகளில் பெரிய பலமாக இருந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவர்கள் டோனியை சந்தித்து பேச உள்ள நிலையில், டோனியின் முடிவு என்ன? என்பதே அனைவரின் கேள்வியாக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here