திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம்பெண் ஒருவர் ஸ்கூட்டரில் சென்ற போது கீழே விழுந்ததில் லொறி டயரில் சிக்கி உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தை சேர்ந்த தம்பதி மாணிக்கம்- சண்முகவள்ளி, இவர்களின் மகள் இந்துமதி (24)

இந்துமதி தனியார் செல்போன் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்தார். கடந்த 3ஆம் திகதி இந்துமதிக்கும் மகுடஞ்சாவடியை சேர்ந்த ஒருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.

அடுத்த வருடம் ஜனவரியில் திருமண நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், சண்முகவள்ளியின் அக்காள் வீட்டுக்கு நேற்று முன்தினம் இந்துமதி தனது தாயாருடன் ஸ்கூட்டரில் சென்றுள்ளார்.

பின்னர், நேற்று காலை இந்துமதி மட்டும் தனியாக ஸ்கூட்டரில் சேலம் நோக்கி வந்து கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக லொறி ஒன்று சென்று கொண்டிருந்தது. அங்குள்ள வேகத்தடையில் ஏறி இறங்கும் போது இந்துமதியின் துப்பட்டா லொறியின் பக்கவாட்டில் இருந்த கொக்கியில் சிக்கியது.

இதனால் ஸ்கூட்டரில் இருந்து நிலைத்தடுமாறி கீழே விழுந்த அவர் லொறியின் அடியில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார், சடலத்தை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். விபத்து தொடர்பாக லொறி ஓட்டுனரை பிடித்து பொலிசார் விசாரித்து வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here