இலங்கை அணி, திட்டமிடலை சரியாக பிரயோகப்படுத்தியதற்கு நாம் அவர்களை பாராட்டியே ஆகவேண்டும் என வீராட் கோஹ்லி கூறியுள்ளார்.

சாம்பியன்ஸ் டிராபி தொடரின் நேற்றைய ஆட்டத்தில் இலங்கை அணி இந்திய அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது.

இந்நிலையில், தோல்வி குறித்து பேசியுள்ள இந்திய அணியின் தலைவர் வீராட் கோஹ்லி, தாங்கள் பேட்டிங்கை நன்றாகவே ஆடியதாக கூறியுள்ளார்.

50 ஓவர்களும் அடித்து நொறுக்கும் அணியாக இந்திய அணி இருந்ததில்லை என கூறிய கோஹ்லி, இலங்கை அணி வலுவான மன நிலையில் களமிறங்கி அருமையாக விளையாடி வெற்றி பெற்றுள்ளதாக கூறியுள்ளார்.

இதற்காக அந்த அணிக்கு மரியாதை செலுத்தும் விதமாக தமது சிரம் தாழ்த்தி நன்றாக ஆடினீர்கள் என்பதை ஒப்பு கொள்ள தான் வேண்டும் என கோஹ்லி கூறியுள்ளார்.

மேலும், இந்திய பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசினார்கள். நமது அணி ஒன்றும் தோற்கடிக்கப்பட முடியாத அணியல்ல.

இலங்கை அணி அவர்கள் திட்டமிடலை சரியாக பிரயோகப்படுத்தியதற்கு பாராட்டியே ஆக வேண்டும் எனவும் கோஹ்லி தெரிவித்துள்ளார்.

இந்த தொடர் சவால் மிகுந்தவை என தாம் ஏற்கனவே கூறியிருந்ததாகவும், இத்தகைய சோதனைகள் வரவேற்கத்தக்கது தான் எனவும் வீராட் கோஹ்லி கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here