வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியின் தோல்விக்கு, இக்கட்டான சூழலில் முக்கிய விக்கெட்களை இழந்தது தான் காரணம் என விராட் கோஹ்லி கூறியுள்ளார்.

இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையே நேற்று நடந்த நான்காவது ஒரு நாள் போட்டியில் இந்தியா 11 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

வெஸ்ட் இண்டீஸ் எடுத்த 189 ஓட்டங்கள் என்ற எளிய இலக்கை இந்தியா பிடித்து விடும் என பலர் நினைத்த நேரத்தில் இந்தியா 178 ஓட்டங்களுக்கு ஆல் அவுட் ஆனது.

இந்நிலையில் தோல்வி குறித்து இந்திய அணியின் தலைவர் விராட் கோஹ்லி கூறுகையில், நாங்கள் சிறப்பாக பந்து வீசினோம்.

அதனால், எதிரணியை 189 ஓட்டங்களில் கட்டுப்படுத்தினோம் என கூறியுள்ளார்.

ஆனால், பேட்டிங் செய்யும் போது இக்கட்டான சூழலில் முக்கிய விக்கெட்களை நாங்கள் இழந்துவிட்டோம் என கூறிய கோஹ்லி, வெஸ்ட் இண்டீஸ் அணியின் பந்து வீச்சும், பீல்டிங்கும் சிறப்பாக இருந்ததாக கூறியுள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் அணி தலைவர் ஹோல்டர் கூறுகையில், இந்திய அணியை வெல்ல முடியும் என நம்பியதாகவும், தங்களின் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here