பாகிஸ்தான் நாட்டின் லெஸ்சுயர் லீக் மற்றும் உலக குரூப் ஆகியவை இணைந்து பாகிஸ்தானில் கால்பந்து கிரிக்கெட் போட்டியை ஊக்குவிக்க முன்வந்தனர். இந்த இரண்டு அமைப்புகளின் உதவியால் உலகின் முன்னாள் கால்பந்து ஜாம்பவான்களை கொண்டு கராச்சி மற்றும் லாகூரில் கண்காட்சி கால்பந்து போட்டி நடத்த முடிவு செய்யப்பட்டது.

இதற்காக பிரேசில் நாட்டின் முன்னாள் வீரர் ரொனால்டினோ, ராபர்ட்டோ கார்லோஸ், மான்செஸ்டர் புகழ் ரியான் கிக்ஸ் ஆகியோர் கராச்சி வந்துள்ளனர். பாகிஸ்தான் ராணுவத்தின் பலத்த பாதுகாப்பின் கீழ் அவர்கள் கராச்சி வந்தடைந்தனர். இவர்களுடன் நிகோலஸ் அனெல்கா, ராபர்ட் பைரெஸ், டேவின் ஜேம்ஸ், ஜார்ஜ் பெயேடேங், லூயிஸ் போயா மோர்டே ஆகியோரும் இணைய இருக்கிறார்கள்.

பாகிஸ்தான் மண்ணில் விளையாடுவதற்காக அவர்களுக்கு, 3 லட்சம் அமெரிக்க டாலர் முதல் 6 லட்சம் அமெரிக்க டாலர் வரை சம்பளமாக கொடுக்க இருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது.

தீவிரவாதிகள் தாக்குதல் காரணமாக கடந்த 10 ஆண்டுகளாக எந்தவொரு விளையாட்டிலும் வெளிநாட்டு வீரர்கள் பாகிஸ்தான் சென்று விளையாட அச்சப்படுகிறார்கள். இதனால் முன்னாள் ஜாம்பவான்களை பாகிஸ்தான் வரவழைத்து பாதுகாப்பு அச்சத்தை போக்கும் வகையில் இப்படி ஏற்பாடு நடைபெற்று வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here