சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் வங்கதேசத்தை இந்தியா 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி தோற்கடித்தது. இந்த போட்டியில் ரோகித் சர்மா சதம் விளாசினார். இந்த போட்டியில் 96 ரன்களை எடுத்த கேப்டன் கோலி 8 ஆயிரம் ரன்களை அதிவேகமாக கடந்து சாதனை படைத்துள்ளார்.

இந்த போட்டியில் 88 ரன்களை சேர்த்த போது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 8 ஆயிரம் ரன்களை கடந்தார். தனது 175-வது இன்னிங்சில் இந்த இலக்கை கடந்த விராட் கோலி இதன் மூலம் ஒரு நாள் போட்டியில் அதிவேகமாக 8000 ரன்களை எடுத்த வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார்.

இதற்கு முன்பு தென்ஆப்பிரிக்க கேப்டன் ஏ பி டிவில்லியர்ஸ் 182 இன்னிங்சில் இந்த இலக்கை தொட்டதே சாதனையாக இருந்தது. அதை கோலி முறியடித்து இருக்கிறார்.

இந்திய தரப்பில் சவுரவ் கங்குலி 200 இன்னிங்சிலும், சச்சின் தெண்டுல்கர் 210 இன்னிங்சிலும், தோனி 2414 இன்னிங்சிலும் 8 ஆயிரம் ரன்களை கடந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

28 வயதான விராட் கோலி இதுவரை 27 சதங்கள், 42 அரைசதங்கள் உட்பட 8,008 ரன்கள் சேர்த்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here