உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டிலும் பல படங்கள் வெளியானாலும் ஒரு சில படங்களே நம்மால் திரும்ப, திரும்ப பார்த்து மகிழக்கூடியதாக அமையும் அப்படிப்பட்ட படங்களை உங்களிடம் பகிர்வதில் மகிழ்கிறோம்.

வண்ணங்களில் கதை சொல்ல முடியுமா? முடியும். வண்ணங்களை வைத்து பல உணர்வுகளை நம்மிடையே கத்தியும் இருக்கிறார்கள். அப்படி வண்ணங்களை வைத்து ஆணி அடித்தார் போல சொல்லப்பட்ட கதைதான் “தும்பாட்” Tumbbad (2018).

பொதுவாக, இதுபோன்ற ஹாரர்/பேண்டஸி திரைப்படங்களில், திரைக்கதைக்கு நிகரான முக்கியத்துவம் கதை நிகழும் நிலப்பரப்பிற்கும் உண்டு. அந்த வகையில் “தும்பாட்” கதையின் நிலப்பரப்பு மிக முக்கிய இடத்தைப் பெரும். இப்படத்தில் வரும் பருவநிலை, படத்தின் கதையோடு சம்பந்தப்பட்டது. 

[Spoiler Starts] தேவர்களின் ஹஸ்தர் மீதான சாபமே “தும்பாட்”ன் மீது மழையாக பொழிந்து கொண்டிருக்கிறது. [Spoiler Ends]

இப்படம் 2012 ல் ஆரம்பிக்கப்பட்டு, பின்னர் 2018 வரை சுமார் 6 வருடங்கள் படமாக்கப்பட்டு வெளியாகியுள்ளது. படத்தில் இடம்பெறும் மழைக்காலத்தை படம்பிடிக்கவே ஆறு வருடங்கள் ஆனதாக கூறப்படுகிறது.

“தும்பாட்” படத்தில் வரும் இடங்கள் பெரும்பாலானவை, சுமார் 100  வருடங்கள் மனித நடமாட்டம் இல்லாத இடங்களாகும். அவ்வாறான, இடங்களை படக்குழுவினர் தேர்ந்தெடுத்து, படமாக்கியுள்ளனர்.

[Spoiler Starts] படத்தின் இறுதி காட்சியான, தேவியின் கருவறைக்குள் நடக்கும் காட்சியானது சாதாரண ஒற்றை எண்ணெய் விளக்கின் (Oil Lamp) உதவியோடு படமாக்கப்பட்டுள்ளது.  மேலும், பல காட்சிகளும் எண்ணெய் விளக்கின் ஒளியில்தான் படமாக்கப்பட்டுள்ளது. படத்தின் கதை நிகழும் காலம் 1910 ‘களின் இறுதியில் நடப்பதன் நம்பகத்தன்மையை உறுதி செய்ய வேண்டும் என்று ஒளி அமைப்பின் ஒவ்வொரு இடங்களிலும் மெனக்கெட்டு இருக்கிறார்கள். [Spoiler Ends]

பேராசை, பெருங்கோபம், பசி, துரோகம் இப்படியான மனித உணர்வுகளை ஒளியினாலும், வண்ணங்களாலும் படம் முழுக்க கடத்தி இருக்கிறார்கள். ஒளிப்பதிவில் ஆர்வம் உள்ளவர்களுக்கு இப்படம் நிச்சயம் குறிப்புகளை அள்ளி வழங்கும் என்றால் அது மிகையாகாது.

மேலும், இப்படத்தின் பின்னணி இசை, கதை நகர்வுக்கு ஏற்றார் போல் மிக பொருத்தமாக அமைந்துள்ளது. சில நேரங்களில் காட்சியோடு இசையும் சேர்ந்து பேசிக்கொண்டிருக்கும் அந்த அளவு சிறப்பாக இசையமைத்திருக்கிறார் இசையமைப்பாளர் ‘Jesper Kyd’. இவர் புகழ்பெற்ற assassin’s creed Franchiseன் Assassin’s Creed valhalla எனும் வீடியோ கேமிற்கும் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி பல சிறப்பம்சங்களை கொண்ட இப்படத்தை நினைவூட்டுவதில் எங்களுக்கு மகிழ்ச்சி. படம் பார்த்துவிட்டு உங்களது கருத்துகளை பதிவிடுங்கள்!

Share:

administrator