Jr. NTR மற்றும் ராம்சரண் நடிப்பில் உருவாகியுள்ள RRR கடந்த மாதம் 25ஆம் தேதி வெளியாகி பெரு வெற்றியை பெற்றது.

RRR திரைப்படம் ஒட்டுமொத்தமாக சுமார் 550 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தி மொழி பதிப்புக்கு மட்டும் சுமார் 200 கோடி செலவு ஆனதாம். தயாரிப்பு செலவு மட்டுமே 400 கோடி செலவழிக்கப்பட்டுள்ளது.

RRR பாக்ஸ் ஆபிஸில், பாகுபலி 2க்குப் பிறகு முதல் வாரத்தில் அதிகபட்சமாக வசூலித்தது. இதுவரை சுமார் 750 கோடிகளைத் தாண்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. RRR இப்போது பாக்ஸ் ஆபிஸில் அதிக வசூல் செய்த இந்திய திரைப்படங்களில் 6 வது இடத்தையும், அதிக வசூல் செய்த தெலுங்கு திரைப்படங்களில் 2 வது இடத்தையும் பிடித்துள்ளது. இந்தியில் 100 கோடி வசூலித்த கிளப்பில் இணைந்துள்ளது

எஸ்.எஸ்.ராஜமௌலி அடுத்ததாக தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டாரான மகேஷ் பாபுவை இயக்கவுள்ளார். மிக விரைவில் ஸ்கிரிப்ட் வேலைகளை தொடங்கவுள்ளார். படத்தின் கதை, பட்ஜெட் குறித்து நிறைய யூகங்கள் வெளியாகிய வண்ணம் உள்ளன.இந்த படத்தின் படப்பிடிப்பை ஓராண்டுக்குள் முடிக்க ராஜமௌலி திட்டமிட்டுள்ளார். பெயரிடப்படாத இந்த படத்தின் ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் ஜூன் மாததிலிருந்து தொடங்கும்.

மகேஷ் பாபு படப்பிடிப்பில் ஜனவரி 2023 இல் கலந்துகொள்வார் எனவும் 2024 ஆம் ஆண்டு கோடை விடுமுறையில் படத்தை வெளியிடவும் ராஜமௌலி திட்டமிட்டுள்ளார். மேலும் விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்

RRR 550 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள நிலையில், எஸ்.எஸ்.ராஜமௌலி மற்றும் மகேஷ் பாபு படத்தின் பட்ஜெட் சுமார் 800 கோடி என கூறப்படுகிறது. இப்படத்தை பிரபல தயாரிப்பாளர் கே.எல் நாராயணா தனது ஸ்ரீ துர்கா ஆர்ட்ஸ் பேனரில் தயாரிக்க உள்ளார். தெலுங்கு திரையுலகில் இதுவரை எடுக்கப்பட்ட படங்களிலேயே அதிக பொருட்செலவில் உருவாகும் படமாக இது இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் நடித்த RRR போலவே இந்த படமும் பல மொழிகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தின் கதையை ராஜமௌலியின் தந்தையான கே.வி.விஜயேந்திர பிரசாத் எழுதுகிறார், மேலும் இது ஜேம்ஸ்பாண்ட் படத்திற்கு இணையானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு ஆப்பிரிக்க காடுகளில் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Share:

administrator