2009இல் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளியான படம் அவதார். பல நாடுகளில் வெளியாகி பிரம்மாண்டமான வெற்றி பெற்றது அவதார் முதல் பாகம்.

அந்த வருடத்தின் BOX Office இல் முதலிடம் பெற்றது இப்படம். முதல்பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகத்தை ஆரம்பித்தார் ஜேம்ஸ் கேமரூன். COVID-19’னால இந்த படப்பிடிப்பு தள்ளிவைக்கப்பட்டது.

CinemaCon 2022 நிகழ்ச்சியில் அவதார் 2 படத்தின் 15 நிமிஷ Glimpse காட்சிகள் திரையிடப்பட்டது.

அடுத்தடுத்து வெளியாகிற அவதார் பாகங்களிற்கான பெயர்கள் மற்றும் வெளியீட்டு தேதியையும் அறிவித்துள்ளார் அவதார் படங்களின் தயாரிப்பாளர் Jon Landau. அவதார் 2ஆம் பாகமான The Way Of Water இந்த வருடம் Dec 16ஆம் வெளியாகும். அதே போல், 3வது பாகம் டிசம்பர் 20, 2024’லும், 4வது மற்றும் 5வது பாகம் முறையே Dec 18, 2026 மற்றும் Dec 22, 2028 ஆகிய தேதிகளில் வெளியாகும் என அறிவித்துள்ளார் Jon Landau.

அவதார் முதல் பாகம் 2009ல் வெளியாகியது. 13 வருடத்திற்கு பிறகு இரண்டாவது பாகம் வெளியாக இருக்கிறது.

முதல் பாகத்திற்கு பிறகு ஜேக் சல்லியும்(Jake sully), நெய்த்ரியும்(Neytiri) அவர்களின் குழுவை விட்டு வெளியேற வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. இதனால் இவர்கள் பண்டோராவின் வேறு இடங்களுக்கு வாழ்வதற்காக செல்கிறார்கள். இதற்கு பிறகு நடைபெறும் சம்பவங்களே அவதார் இரண்டாம் பாகத்திற்கான கதை என சொல்லப்படுகிறது.

இன்னும் சில நாட்களில் ட்ரைலர் வெளியாகும் என எதிர்பாக்கப்படுகிறது.

Share:

administrator